அவசர சிகிச்சையில் அலட்சியம் கூடாது.! சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.! – புதுசேரி முதல்வர்.!

காலதாமதமாக சிகிச்சை அளித்ததன் காரணமாக தான் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளனர். எப்போதும் அவசர சிகிச்சையில் அலட்சியம் இருக்கவே கூடாது. – இவ்வாறு புதுசேரி முதல்வர் ரங்கசாமி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காரைக்காலில் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்த சம்பவம் தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது. தன் மகளை விட அதிக மார்க் எடுத்துவிட கூடாது என பால மணிகண்டனின் சக மாணவியின் தயார் சகாயராணி விஷம் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் பலமணிகண்டனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே பெற்றோர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரியான சிகிச்சை கொடுக்காத காரணத்தால் தான் மாணவன் உயிரிழந்ததாக குற்றசாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து 3 பேர் கொண்ட மருத்துவர் குழு ஆய்வு செய்து நேற்று புதுசேரி சுகாதாரத்துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். பின்னர் புதுசேரி முதல்வர் ரங்கசாமி, அப்போது பணியில் இருந்த 2 மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுசேரி முதல்வர் ரங்கசாமி, ‘ பள்ளி மாணவர் விஷயத்தில் அலட்சியமாக சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் தக்க நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். காலதாமதமாக சிகிச்சை அளித்ததன் காரணமாக தான் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளனர். எப்போதும் அவசர சிகிச்சையில் அலட்சியம் இருக்கவே கூடாது.’ எனவும் அவர் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment