சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள் வெளியீடு.!

சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள் வெளியீடு.!

சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது ரூ.10,000 க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்கள் மற்றும் தேவாலயங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் கடந்த 10 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

  • வழிபாட்டு தலங்களில் பிரசாதம் வழங்க அனுமதியில்லை.
  • வழிபாட்டு தலங்களை தினசரி 3 முறை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • அனைத்து பணியாளர்களும். கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube