விவேக் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலிக்கு தடை..!

நடிகர் விவேக் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறைவு பெற்றது.

நடிகர் விவேக் காலமானதை தொடர்ந்து, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்பட்டது. காலையிலிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த  விவேக்கின் உடல் இதற்கு மேல் பொது மக்கள் அஞ்சலி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவரின் குடும்ப முறைப்படி நடக்க உள்ள சடங்குகளுக்காக பொது மக்கள் அஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவேக் உடல் சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.

author avatar
murugan