இன்று மாலை விண்ணில் பாய்கிறது PSLV C50.!

இன்று மாலை விண்ணில் பாய்கிறது PSLV C50.!

இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் இன்று மாலை 3.45 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஆண்டு இஸ்ரோ ஏவும் இரண்டாவது ராக்கெட்.

இந்த செயற்கைகோள், கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை சேகரிப்பதற்கு விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பட்டு உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube