பஞ்சாபில் நடந்த போராட்டத்தின் போது பெண் விவசாயியை போலீஸ் அதிகாரி அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லியில் இருந்து கத்ரா இடையேயான தேசிய நெடுஞ்சாலை சுமார் ரூ.39,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது. இந்த நெடுஞ்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் விவாசாயிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த போராட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுவதற்கு முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களை பறிக்க அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயியை பஞ்சாப் போலீஸ் அதிகாரி ஒருவர் அறைந்துள்ளார். இதன்பின், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி தெரிவித்துள்ளார். தற்பொழுது, போலீஸ் அதிகாரி பெண் விவசாயியை அறைந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) உருவாக்கப்பட்டு வரும் இந்த விரைவுச் சாலை, டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் பயண நேரத்தை நான்கரை மணி நேரமாகவும், தேசிய தலைநகர் மற்றும் கத்ராவிற்கும் இடையிலான பயண நேரம் ஆறரை மணி நேரமாகவும் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
This is how the Punjab police cop under @BhagwantMann ji slaps a woman farmer .The farmers were protesting against the land acquisition. Their can be no farmer_oriented party except Congress. #Siddaramaiah #congress pic.twitter.com/VFiIPdIApR
— DK Shivakumar (@DKShivkumar09) May 18, 2023