லாபம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் மே 12 ஆம் தேதி  ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .அதில் ஒன்று லாபம் . மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது சமீபத்தில் தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது லாபம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதைபோல் படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த திரைப்படம் வருகின்ற ரம்ஜான் தினமான மே 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.