நாளை வலிமை அப்டேட் வராது தயாரிப்பாளர் ட்வீட்.!

நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை,

By bala | Published: Apr 30, 2020 11:57 AM

நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், படத்தின் அப்டேட் காக ரசிகர்கள் காத்துள்ளனர், நாளை அஜித் பிறந்த நாள் முன்னிட்டு வலிமை படத்தின் அப்டேட் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் "கோவிட் 19 கொரோனா என்னும் கொடிய நோயால் அகிலம் உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்திற்கும் விளம்பரம் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துளோம் என்று தெரிவிக்கிறோம். அதுவரை தனித்திருப்போம் நம் நலம் காப்போம்" என்று பதிவு செய்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc