தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்…! மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய பிரதமர்…!

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்.  

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக சிட்னி உள்ளிட்ட நாட்டின் முக்கியமான சில இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய பிரதமரிடம் நாட்டு மக்கள் தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் எத்தனை சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று சில திட்டமிடல்களை நாங்கள் வகுத்தோம். ஆனால் இப்போது அதை எங்களால் எட்ட முடியவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.

தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை நானே அனைத்து பொறுப்புகளையும் நேரடியாக ஏற்கிறேன். அதேபோல் தடுப்பூசி விநியோகப்படுத்துவதில் உருவாகும் சவால்களுக்கும் நானே பொறுப்பு ஏற்கிறேன். சில விஷயங்ள் இப்போது வரை நம் கட்டுக்குள் இருக்கிறது. சில விஷயங்கள் மட்டும் இல்லை. இருப்பினும் பொறுப்புகளை நான் ஏற்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.