பிரசாந்துடன் ‘அந்தகன்’ படத்தில் இணைந்த பிரியா ஆனந்த்…!

பிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். 

கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .

மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தில் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கே‌எஸ் ரவிகுமார், பிக் பாஸ் வனிதா, ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் பிரியா ஆனந்த்  நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் பிரசாந்துடன் அவர் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

Prashanth

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.