கடுமையான அபராத நிபந்தனைகளுடன் தனியார் ரயில்வே வரையறை.!

கடுமையான அபராத நிபந்தனைகளுடன் தனியார் ரயில்வே வரையறை.!

தனியார் ரயில் சேவைக்கான வரையறையை மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாம். அதன்படி சரியான நேரத்தில் ரயிலை இயக்க தவறினால் கடுமையான அபராதம் விதிப்பது, பராமரிப்பு தொகை என பல்வேறு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளனவாம்.

தனியார் ரயில், ரயில் நிலையத்திற்கு தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்து விட்டால் அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். 15 நிமிடம் தாமதமாக வந்தால் அது சரியான நேரத்தில் வராததாக கருதப்படும். ரயில்வே உட்கட்டமைப்பை பயன்படுத்த தனியார் நிறுவனங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 512 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஒரு ரயில் 10 நிமிடம் முன்னதாக ரயில்வே நிலையத்திற்கு வந்து விட்டால் அதற்காக 10 கிலோ மீட்டருக்கான பராமரிப்பு தொகையை அபராத தொகையாக ரயில்வே நிர்வாகத்திடம் செலுத்த வேண்டியிருக்கும்.

தனியார் ரயில்கள் உரிய சரியான காரணமின்றி ரயிலை ரத்து செய்தால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் தனியார் ரயில்வே வரைவில் உள்ளனவாம்.

தனியார் ரயில்கள் சரியான நேரத்தினை கடை பிடிப்பதற்காக இந்த கடுமையான விதிமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube