பிரதமர் கிசான் திட்டம் – ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.38,000 கோடி விடுவிப்பு.!

பிரதமர் கிசான் திட்டம் – ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.38,000 கோடி விடுவிப்பு.!

கடந்த 5 மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்றும் மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று இரண்டாவது நாளான அவையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பிரதமர் கிசான் திட்டம் மோசடி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கிஸான் திட்டத்தில் கடந்த கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சமீபத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் கிசான் திட்டத்தில் சில போலியான பயனாளிகள் சோ்க்கப்பட்டதாக தெரியவந்தது. சில மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது என்றும் கூறியுள்ளார். முறைகேடாக பயனடைந்தவா்களிடம் இருந்து ரூ.47 கோடி வரை மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 வழக்குகளைப் பதிவு செய்து, தமிழக சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பிரதமர் உழவர் உதவி நிதி திட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றும் நிலம் வைத்துள்ள, நிதி உதவி பெற தகுதி உள்ள விவசாயி யார் என்பதை கண்டறிவது மாநில அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube