நிலநடுக்கத்திலும் நேரலையை தொடர்ந்த நியூஸிலாந்து பிரதமர்..!

நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் போதும், ஒரு தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் பேட்டி கொடுத்து வந்தார்.

நியூஸிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா, நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கி வந்தார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் அந்த வளாகமே லேசாக குலுங்கியது. இந்நிலையில், பிரதமர் அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரிடம், “இங்கு என்ன நடக்கிறது? என் பின்னால் உள்ள பொருட்கள் நகர்கிறதா? இங்கு லேசான நிலநடுக்கத்தை நாம் உணர்கிறோம்” என கூறினார். அதற்க்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் “ஆம், ஆம், நிலநடுக்கத்தால் நாடாளுமன்ற வளாகமே குலுங்குகிறது. உங்களுக்கு ஏதும் ஆபத்து இல்லையே. நலமாகத்தான இருக்கிறீர்கள்” என கேட்டார் மேலும், “பேட்டியை தொடர விரும்புகிறீர்களா?” என கேட்டார். அதற்கு பிரதமர் ஜெசிந்தா, சிரித்தபடியே “பேட்டியை தொடரலாம்” என கூறினார். அந்த நிலநடுக்கத்துக்கு மத்தியிலும், அவர் அந்த நேரலையை முழுமையாக முடித்தார்.

இந்நிலையில், வெலிங்டனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 5.6 புள்ளிகளாக பதிவானது. மேலும் அந்த நிலநடுக்கத்தினால் பெரியளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.