இன்று பிரதமர் காணொலி காட்சி மூலமாக கொரோனா போராளிகளுடன் உரை.!

இன்று பிரதமர் காணொலி காட்சி மூலமாக கொரோனா போராளிகளுடன் உரை.!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்  தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சரியான வேலை இல்லாததால் பலர்  உணவின்றி தவித்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகங்களுடன் சேர்ந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் உதவி செய்து  வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாரணாசி பொதுமக்களும் , அங்குள்ள சமுக ஆர்வலர்களும், மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவி சொந்த முயற்சியால் வருகின்றனர். இதன் மூலம் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 20 லட்சம் உணவு பொட்டலங்கள் மற்றும் 2 லட்சம் ரேஷன் பொருட்களை 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவர்களை மாவட்ட நிர்வாகம் கொரோனா போராளிகளாக கவுரவித்தது.

இந்நிலையில், வாரணாசியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அங்குள்ள சமுக ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக கலந்துரையாற்ற உள்ளார்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube