கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் – இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார். 

குறைந்த விலையிலான நீடித்த வீட்டு வசதிக்கான ஆஷா இந்தியா திட்டத்தின் வெற்றியாளர்களையும் அறிவிக்க இருக்கும் பிரதமர், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (நகர்புறம்) சிறப்பாகச் செயல் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளையும் வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது, நவரித் (இந்திய வீட்டுவசதிக்கான புதிய, கட்டுப்படியாகக் கூடிய, சரிபார்க்கப்பட்ட, புதுமை ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள்) என்னும் புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களுக்கான சான்றிதழ் கல்வியையும் பிரதமர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.மேலும், சர்வதேச வீட்டுவசதி தொழில்நுட்பச் சவால் – இந்தியாவால் அடையாளம் காணப்பட்டுள்ள 54 புதுமையான வீட்டுவசதிக் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டையும் அவர் வெளியிடுகிறார். திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர்கள் இந்நிகழ்ச்சியில் பபங்கேற்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.