மக்களை சந்திப்போம், மனங்களை வெல்வோம் என தனது பயணத்தை தொடங்கினேன் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதில்  அவர் பேசுகையில்,  கிராமங்களே கோவில், தற்போது கோவிலுக்கு வந்ததை போல் உணர்கிறேன்.மக்களை சந்திப்போம், மனங்களை வெல்வோம் என தனது பயணத்தை தொடங்கினேன். பெரு நிறுவனங்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார்.

மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே எம்பி, எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் .பழைய காலத்தில் குடவோலை முறையில்தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டனர் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.