இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது.இதில் முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக நேற்று  நேற்று மாலை மாலத்தீவுக்கு சென்றார்.இன்று இரண்டாம் நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

இலங்கையின் கொழும்பு நகர விமான நிலையத்தில் அந்நாட்டு, குடியரசுத் தலைவர் ரணில் விக்ரம்சிங் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.இந்நிலையில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.பின்  பிரதமர் நரேந்திர மோடி, அங்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.