வரும் 26-ம் தேதி ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு ஆமீரகத்திற்கு செல்ல உள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜூன் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு ஆமீரகத்திற்கு செல்ல உள்ளார். 

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜெர்மனியில் ஸ்க்லோஸ் எல்மாவ், ஜெர்மன் பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர்மோடி கலந்து கொள்கிறார். அதன்பின், ஜூன் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். முன்னாள் ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here