இந்தியா-சீனா பதற்றம்: லடாக் எல்லையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

இந்தியா-சீனா பதற்றம்: லடாக் எல்லையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

லடாக்கில் ஆய்வுகளை மேற்கொண்ட பிரதமர் மோடி, “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.

லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி லடாக் சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அங்கு முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பிரதமருடன் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்…” என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். படைமாட்சி எனும் அதிகாரத்தில், குறள் எண் 766-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது.

மேலும் உரையாற்றிய அவர், இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். எனவும், அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

Join our channel google news Youtube