தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி..!

தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி..!

மனதின் குரல் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் ‘மான் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில்  உரையாற்றுவது உண்டு. இந்த நிகழ்ச்சி தமிழில் ‘மனதின் குரல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், நாம் இயற்கையை பாதுகாக்கும் போது பதிலுக்கு. இயற்கையும் நம்மை பாதுகாக்கும். இதனை நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்ந்திருப்போம். அதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நல்ல உதாரணத்தை அளித்துள்ளார்கள்.

கடலோரப்பகுதியில், சில பகுதிகள் கடல் அரிப்புக் காரணமாக காலப்போக்கில் அழிந்து போவதை நாம் பார்க்கிறோம். இந்த ஆபத்தை தடுக்கும் வண்ணம் சிறிய தீவுகள் தூத்துக்குடியில் உள்ளனர். தூத்துக்குடி மக்களும், வல்லுனர்களும் இந்த தீவுகளில் பனை மரங்களை அதிகளவில் நட்டு வருகிறார்கள். இந்த மரங்கள் புயல் கடல் அரிப்பு போன்ற இயற்கை பேரிடர்களின் போது நிலைத்து நின்று நிலத்தை பாதுகாப்பதோடு, பேரழிவுகளையும் தடுக்கிறது என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube