உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!

உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி மூலம் நாளை “நமாமி கங்கே” கீழ் ஆறு திட்டங்களை திறந்து வைக்கவுள்ளார். மேலும், சாந்தி காட்டில் “கங்கா அவ்லோகன்” என்று பெயரிடப்பட்ட கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியை பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார்.

இந்நிலையில்,ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மாவட்டங்களில் கங்கை ஆற்றில் சுமார் 80% கழிவு நீர் இருக்கிறது. எனவே, இங்கு முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைப்பதினால் கங்கையை சுத்தமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கை வகிக்கும்.

இதற்கிடையில், உத்தரகண்டில் கங்கை நதிக்கு அருகிலுள்ள 17 நகரங்களில் மாசுபடுவதைக் கவனித்துக்கொள்தற்கான 30 திட்டங்களும் 100% நிறைவடைந்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.