பீகாரின் 7 வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.!

பீகாரின் நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த 7 திட்டங்களை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

குடிநீர் விநியோகத் திட்டங்கள், கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம் என மொத்தம் ரூ.541 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களை, பீகார் நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் வீட்டு வசதித்துறையின் கீழ் செயல்படும். வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்றார்.

அதாவது, இந்த 7 வளர்ச்சி திட்டங்களில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பாட்னா மாநகரின் பியுர் மற்றும் கர்மாலிசாக் ஆகிய 2 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. அம்ருத் மிசன் திட்டத்தின் கீழ் சிவான் மற்றும் சாப்ரா ஆகிய நகரங்களில் குடிநீர் விநியோக திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அம்ருத் மிசனின் கீழ் மங்கர் மாவட்டத்தில் மற்றொரு குடிநீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கலையும் பிரதமர் மோடி நாட்டினார்.

மேலும், நமாமி கங்கா திட்டத்தின் கீழ், முசாஃபர்பூர் ரிவர்ஃப்ரண்ட் மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முசாஃபர்பூரின் 3 மலைத்தொடர்களும் மேம்படுத்தப்படும்.
ஆற்று கரையோர பகுதிகளில் அடிப்படை வசதிகளான இலவச கழிவறைகள், மாற்று அறை, டவர் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்