வெளியுறவு கொள்கையின் மதிப்பை பிரதமர் மோடி குறைத்து விட்டார் – சுப்ரியா

வெளியுறவு கொள்கையின் மதிப்பை பிரதமர் மோடி குறைத்து விட்டார் – சுப்ரியா

ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா குற்றசாட்டு.

பிரதமர் மோடியின் அமெரிக்க  பயணம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா, வெளியுறவு கொள்கை  என்பது,  நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும். அதில் எந்த சமரசத்திற்கு இடம்தரக் கூடாது.

ஆனால், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார். கடந்த காலங்களில் இந்தியாவின் பங்கு இல்லாமல் வெளியுறவு விவகாரங்களில் முடிவு எடுக்கபடாத நிலையில், இப்போது இந்தியாவை ஒரு பங்குதாரராக கூட சேர்க்கப்படாமல் முடிவுகள் எடுக்கப்படுவதாக கூறினார்.

இருப்பினும், பிரதமர் மோடி அமெரிக்க பயணம் வெற்றி பெற தான் வாழ்த்துவதாகவும், இந்திய நலனுக்கு உகந்த பேச்சுவார்த்தைகளுக்கு அவர் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube