தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார் – ராகுல் காந்தி

தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார் என்று ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். அதன்படி, இன்று கோவையில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு வருவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி.

பிரதமர் மோடி தமிழ் மொழி, தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளார். தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டு வருவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டி நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்