மாநிலங்களவையில் கண்கலங்கிய பிரதமர் மோடி.!

மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்துக்காக கண்கலங்கினார் பிரதமர் மோடி.

இன்று டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓய்வு பெறும் எம்பிக்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வரும் அவரது பதவி காலம் நிறைவடைகிறது. இதுகுறித்து அவர்களை பாராட்டி பிரதமர் மோடி பேசுகையில், குலாம் நபி ஆசாத் அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் அக்கறை கொண்டவர் என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரது இடத்திற்கு வரும் புதிய தலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது என கண்கலங்கியவாரே பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நான் உங்களை ஓய்வு பெற விடமாட்டேன், தொடர்ந்து உங்கள் ஆலோசனையை எடுத்துக்கொள்வேன் என்றும் என் கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்திருக்கும் எனவும் பிரதமர் மோடி உரையில் தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை அமைத்த பின்னர், 2014 ஜூன் மாதம், குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2015-ஆம் ஆண்டு, ஜம்மு-காஷ்மீர் தொகுதியில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு குலாம் நபி ஆசாத்துக்கு “சிறந்த நாடாளுமன்ற விருது” வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்