ஒரே மேடையில் இன்று முதல்வரும், ஆளுநரும்!

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்வரும், ஆளுநரும் ஒரே மேடையில் சந்திப்பு.

சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று காலை 10 மணிக்கு நூற்றாண்டு விழா இறங்கி நடைபெறுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தரான ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் அரசியல், கொள்கை ரீதியாக முரண்பட்ட கருத்துக்களை பேசுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியை திணிக்க வேண்டாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், இந்தியை திணிக்கவிலை என ஆளுநரும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்வரும், ஆளுநரும் சந்திக்கவுள்ளனர். இந்த விழாவில் பிஎச்டி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் உள்பட 712 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment