ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.
கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக திருத்திய கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது.
அதன்படி, தொடக்கப்பள்ளி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு, மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முறையே மே 29 மற்றும் 30 தேதிகளில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தற்போது, தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பாக கீழ்க்காணும் திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கலாகிறது.
