கர்நாடகாவிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிக்கு விலை நிர்ணயம்!

கர்நாடகாவிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிக்கு விலை நிர்ணயம்!

கொரோனா பெருந்தொற்று காலங்களில் அதிகம் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகள் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் அந்த கருவிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் படுக்கை அறை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் பண வசதி இல்லாவிட்டாலும் நோயை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக மக்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்றாலும், அங்கு அளவுக்கு அதிகமான விலை வசூலிக்கப்படுகிறது.

நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 49 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 328 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கர்நாடகாவில் 17.90 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தற்பொழுது 5.17 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலத்திலும் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரேக்கான விலையை நிர்ணயிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாம்.

இது குறித்து கர்நாடகா மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், அதாவது தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள சிடி ஸ்கேனுக்கு 1500 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், எக்ஸ்ரே எடுப்பதற்கு 250 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் மாநில அரசு விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube