Home India ஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு…!

ஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு…!

0

மகாராஷ்டிராவுக்குப் பிறகு ஹரியானா மாநிலத்தில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையைக் குறைத்துள்ளது.

இந்நிலையில், தனியார் ஆய்வகங்களில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையை ரூ.900 மற்றும் ரூ .500 ஆக ஹரியானா அரசு குறைத்துள்ளது.

இது, தொடர்பான உத்தரவை ஹரியானாவின் சுகாதாரதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் அரோரா வெளியிட்டார். இதற்கு, முன்னதாக ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் தனியார் ஆய்வகங்களில் விரைவான ஆன்டிஜென் சோதனைகளின் விலை ரூ .1,200 மற்றும் ரூ .650 ஆக இருந்தது.

அந்த வகையில், தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை செய்வதற்கான விலையை ஹரியானா அரசு குறைப்பது இது மூன்றாவது முறையாகும்.

Exit mobile version