நண்பனை போல் நடித்து கொள்ளையடித்த நபர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் ஆர்.எம்.பி நகரை சேர்ந்தவர் செளந்தரகுமார் ஆவார்.இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வந்துள்ளார்.

இவருக்கு சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மணி என்பவருடன் நட்புறவு ஏற்பட்டுள்ளது.மேலும் மணி புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த டென்னீஸ் என்பவரை சௌந்தரகுமாருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.பின்னர் டென்னீஸ் தனது வீட்டிற்கு கேமரா பொறுத்த வேண்டும் என்று கூறி சௌந்தரகுமாரை அழைத்துள்ளார்.

இதன் காரணமாக செளந்தரகுமார் டென்னிஸை செல்போனில் அழைத்து எங்கே வரவேண்டும் என்று கூறியுள்ளார்.அதற்கு டென்னீஸ் சந்தைக்கு வருமாறு கூறியுள்ளார்.பின்னர் செளந்தரகுமார் அங்கு சென்றுள்ளார்.

அந்த இடத்தில் டென்னீசும் அவரது இரு நண்பர்களும் மதுபோதையில் இருந்துள்ளனர்.அப்போது டென்னீஸ் ,வீட்டில் கேமரா பொறுத்த வேண்டும் என்று கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது போகும் வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு டென்னீஸ் செளந்தரகுமாரிடம் 5000 பணம் தருமாறு கேட்டுள்ளார்.அதற்கு செளந்தரகுமார் என்கிட்ட பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அபோது மது போதையில் இருந்த மூவர் செளந்தரகுமாரை பலமாக தாக்கி அவரிடம் இருந்த 5,000 பணம் மற்றும் 10,000 மதிப்புள்ள செல்போனை எடுத்து கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த செளந்தரகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதன் காரணமாக வழக்கு தொடுத்த காவல்துறையினர் டென்னீசையும் அவரது நண்பர்களையும் தேடிவருகின்றன.

மேலும் டென்னீஸ் கொலை ஆள்கடத்தல் போன்ற வழக்குகளில் தேடப்படும் நபர் என்று தெரியவந்துள்ளது.