புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது ..!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார்.

இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

மேலும், குடியரசு தலைவருக்கு ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனால், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

author avatar
murugan