"முகக்கவசம் அணியாத அதிபர் டிரம்ப் ஒரு முழு முட்டாள்"- ஜோ பிடன்!

"முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முட்டாள்"

By surya | Published: May 28, 2020 07:13 PM

"முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முட்டாள்" எனவும், அவரின் கவனக்குறைவால் கொரோனவால் இன்று ஒரு லச்ச உயிர்களை இழந்துள்ளதாக ஜோ பிடன் குற்றம்சாற்றினார்.

அமெரிக்காவின் டெலோவேரின் உள்ள போர் வீரர் மகனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரின் மனைவி வந்தனர். அப்பொழுது அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். அஞ்சலி செலுத்திய பிறகு அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர், "முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முட்டாள்" என கூறினார். மேலும் தொடர்ந்த அவர், டிரம்பின் கவனக்குறைவு, கர்வம் ஆகியவற்றினாலே தான் அமெரிக்கா ஒரு லட்சம் உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது என கூறினார்.

Step2: Place in ads Display sections

unicc