அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை….!!

  • வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
  •  அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை வியட்நாமில் தலைநகரான ஹனோய் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகின்றது. இதையடுத்து  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் முன்னதாக வியட்நாம் வந்து சேர்ந்தார். இதையடுத்து தனி விமானத்தில் வந்த டிரம்ப் மற்றும் அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடரும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment