ஆகஸ்ட் 8 பாரத ரத்னா விருது பெறுகிறார் பிரணாப் முகர்ஜி!

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி பிரணாப் முகர்ஜி பெறுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினம் அன்று இந்த ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமூக செய்யபட்டாளர் நானா தேஷ்முக் மற்றும் பாடகி பூபன் ஹசாரிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதில், நாட்டை காக்கும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 8ம் தேதி டெல்லி ராஷ்டிரிய பவனில் நடைபெறும் அரசு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து பாரத ரத்னா விருதினை பிரணாப் முகர்ஜி பெற இருக்கிறார்.