பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில் உள்ளார் – ராணுவ மருத்துவமனை

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா மற்றும் வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாக ராணுவ ஆராய்ச்சி  தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டரில் மூலம்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பிராணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து தகவல் தெரிவித்து வருகிற நிலையில், சமீபத்தில் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், பிராணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார். அவர் நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.