பிளாக் பஸ்டர் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் பிரபாஸ்.!

பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தினை தொடர்ந்து கே.ஜி.எஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ராதே ஷியாம் எனும் படத்தில் நடித்து வருகிறார் .அதனை தொடர்ந்து ஆதி புருஷ் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.3டி தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு,கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளிலும் உருவாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபாஸ் அவர்கள் ஆதிபுருஷ் படத்தினை தொடர்ந்து சூப்பர் பட இயக்குனருடன் கைக்கோர்க்க உள்ளார் . பிரபாஸ் அடுத்தாக கேஜிஎஃப் பட இயக்குனருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல் .தற்போது இவர் கே.ஜி.எஃப்-2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

கேஜிஎஃப்-2 படத்தை அடுத்து இந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகும் படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாகவும் ,அதில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வெற்றி படங்களை ரசிகர்களுக்கு அளித்த பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.