பனாமாவில் நேற்று 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று பனாமா-கொலம்பியா எல்லைக்கு சற்று அருகில் உள்ள கரீபியன் தீவுகளில் புதன்கிழமை (நேற்று) இரவு நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 -ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பனாமாவின் புவேர்ட்டோ ஒபால்டாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இருந்தது.
திடீரென நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சற்று அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தாஞ்சம் அடைந்தார்கள். மேலும், இந்த நிலநடுக்கத்தில் ஏற்ப்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.