#BREAKING: கொடநாடு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் இருந்த நிலையில்,   மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சாயனுக்கு சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து, சயான் கடந்த 17-ந் தேதி ஊட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தில் கொடநாடு வழக்கில் அதிமுக முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக சயான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். கொடநாடு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.

கோடநாடு வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியது என உச்சநீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan