மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைப்பு.!

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பின்னர் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின்னர் 2020 -21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை 2வது அமர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 11% வளர்ச்சியடையும் என அறிக்கையில் கணக்கிடப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்ற குரல் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் பிப்.1-ஆம் தேதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்