கொரோனாவுக்கு நாசல் தடுப்பூசி சாத்தியம் – பாரத் பயோடெக் எம்.டி விளக்கம்!!

கொரோனா வைரசுக்கு நாசல் தடுப்பூசி (nasal vaccine) குறித்த சாத்தியக் கூறுகளை பாரத் பயோடெக் எம்.டி டாக்டர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றில் பேசிய பாரத் பயோடெக் எம்.டி டாக்டர் கிருஷ்ணா எலா, கொரோனா தடுப்பூசிகள் நுரையீரல் கீழ்ப்பகுதி மட்டுமே பாதுகாக்கின்றனர். நுரையீரலின் மேற்பகுதி மற்றும் மூக்கு பாதுகாக்கப்படுவதில்லை என கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். ஆனால், அந்த தடுப்பூசி மூலம் தீவிர நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பதைத் தடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு 2-3 நாட்களுக்கு காய்ச்சல் வரக்கூடும் என்றும் ஆனால், இறப்பு குறையும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, பேசிய அவர், கொரோனாவில் இருந்து மேலும் தற்காத்துக்கொள்ள ஒரு நாசல் தடுப்பூசி குறித்து விவரித்தார். அதாவது,  நீங்கள் ஒரு நாசல் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், தொற்றுநோயைத் தடுக்கலாம். இதன் மூலம் வைரஸ் பரவல் ஒருவரிடம் இருந்து தடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இது போலியோ போன்ற 4 சொட்டுகள். மூக்கில் ஒரு துளைகளில் 2 சொட்டுகள் என இரண்டு துளைகளில் 4 சொட்டுகள் இடப்படும். தற்போது, WHO போன்ற உலகளாவிய அதிகாரிகள் நாசல் பற்றி இரண்டாம் தலைமுறை தடுப்பூசியாக நம்புகிறார்கள். ஊசி போடும் தடுப்பூசிகள் வைரஸ் பரவுவதை நிறுத்தாது. எனவே, நாசல் தடுப்பூசிகளை நாம் உலகளவில் இணைக்க முடியும் எனவும் விளக்கமளித்தார்.

நாசல் தடுப்பூசிகளுக்கு முதல் கட்டம் சோதனை நடந்து வருகிறது. இதுகுறித்து அறிவிப்பு மே 8 தேதிக்கு முன்பு வெளிவரலாம். நாசல் தடுப்பூசி கொண்டு வந்த முதல் நபராக நாம் (பாரத் பயோடெக்) இருக்கும் என்றும் நாசல் தடுப்பூசி குறித்த ஆய்வுகளுக்காக காத்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். கட்டுப்பாட்டாளர்கள் உதவி செய்தால், அமெரிக்கா, சீனாவிலிருந்து எங்களுக்கு போட்டி இருந்தாலும் நாங்கள் இதில் முதன்மையாக இருப்போம் என உறுதியளித்தார்.

இதனிடையே, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயம் செய்து அந்நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இதற்குமுன்பு சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்தது அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

10 mins ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

14 mins ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

17 mins ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

43 mins ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

54 mins ago

படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?

Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…

1 hour ago