பிரேசில் அதிபருக்கு 2 பரிசோதனையிலும் பாசிடிவ்.!

கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், அமெரிக்காவுக்கு அடுத்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 75,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோவிற்கு முதன் முதலில் கொரோனா இருப்பது கடந்த ஜூலை 7-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இதனால், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து இன்னும் ஜெயீர் போல்சோனாரோ மீளவில்லை என CNN செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என்ற அறிவுரையைத் அவர் தொடர்ந்து மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan