போட்டோவிற்கு போஸ் கொடுத்து 262 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலி!

போட்டோவிற்கு போஸ் கொடுத்து 262 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலி!

கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுப்பதற்காக, ஒரு குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த, 38 வயதான ரோஸ் லூம்பா என்ற பெண், அந்த மாநிலத்தில் உள்ள கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுப்பதற்காக, ஒரு குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘லூம்பா அந்த குன்றில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை மீறி சென்று புகைப்படத்திற்காக ஒரு பாறை மீது நின்று போஸ் கொடுத்துள்ளார். அப்போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.’ என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, குன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்க மாநில அவசர சேவை குழுவினரும் மற்றும் விக்டோரியா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube