பிரபல பட தயாரிப்பாளருக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பிரபல பட தயாரிப்பாளருக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வே வெயின்ஸ்டீன் ஹாலிவுட்டின் பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் புகார் வழக்கில் 23 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்நிலையில், இவர் மீது 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகள், மாடல் அழகிகள் பாலியல், பலாத்கார புகார்களை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, இவருக்கு  நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 

இதனையடுத்து, ஹார்வே வெயின்ஸ்டீன் சார்பில் வழக்காடிய நீதிபதி, அவர் பல நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்ததை சுட்டிக் காட்டிய அவருடைய வழக்கறிஞர், 5 ஆண்டு குறைந்தபட்ச தண்டனையை வழங்கும்படி நீதிபதியிடம் மன்றாடினார். இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.