'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் பிக்பாஸ் ரித்விகா..?

தமிழில் டப்பிங் பேச ஆவலுடன் இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்

By ragi | Published: May 28, 2020 06:17 PM

தமிழில் டப்பிங் பேச ஆவலுடன் இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில்  வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் மோகன் ராஜா, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, ரித்விகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர், டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

சமீபத்தில் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து பல படங்களின் டப்பிங் பணிகள் ஆரம் பிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி பிக்பாஸ் பிரபலமான ரித்விகா தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை செய்து முடித்துள்ளார். மாஸ்க் அணிந்து கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்காக டப்பிங் செய்யும் ரித்விகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மேலு‌ம் இந்த படத்தில் பிரபல நடிகையான கனிகா அகதியாக நடிப்பதாகவும், அவரின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டதாகவும் , இலங்கை தமிழில் டப்பிங் பேச ஆவலுடன் இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc