‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்றுக் காவியம் நாவலைத் தழுவி திரைப்படமாக்கினார் இயக்குனர் மணிரத்னம். படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்து, படத்தின் இரண்டாம் பாகம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது.
PS2 From Today [Image Source : Twitter/ @LycaProductions]ஏற்கனவே, வெளியான பொன்னியின் செல்வன் 1 பிளாக்பஸ்டர் ஹிட்டானது, இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை தவிர இன்று சில மாநிலங்களில் காலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, திரைப்படம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், இன்று தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாக இருக்கிறது.
PonniyinSelvan2 From Today [Image Source : Twitter/ @LycaProductions]பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் விளம்பரங்கள் மற்றும் படக்குழுவின் பேச்சுகள் படத்திற்கு முக்கியப் பங்கு வகுத்தன.
இப்படம் ரசிகர்கள் மனதில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்யும் என்றும், ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.1000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
the world of Ponniyin Selvan [Image Source : Twitter/ @LycaProductions]பொன்னியின் செல்வன்:
இப்படத்தில் சியான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் மிகவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.