பொங்கல் விடுமுறை: 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மது விற்பனை!!மீண்டும்  களைகட்டியது மது விற்பனை

23

பொங்கல் விடுமுறையை ஒட்டி  ரூ.500 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது

இந்த வருடம் பொங்கல் வருகின்ற 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதேபோல்  பொங்கல் பண்டிகைக்காக  ஜனவரி 14ஆம் தேதி அரசு விடுமுறை என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது . ஜனவரி 14ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய, வரும் பிப்ரவரி 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும்  என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது .ஜனவரி 14ஆம் தேதி விடுமுறை என்பதால் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விடுமுறை கிடைக்கிறது.

Image result for மது விற்பனை

 

 

இதனால் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை அளித்தது. இந்நிலையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது .சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை டாஸ்மாக் மது விற்பனை இலக்கை தாண்டியது.மதுபானங்களின் 60% பிராந்தியும், 30% விஸ்கி மற்றும் பீர் விற்பனையானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மதுக்கடை விடுமுறைக்கு பின் இன்று மீண்டும்  களைகட்டியது மது விற்பனை.