தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸ்..! தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸை  தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸை  தமிழக அரசு அறிவித்துள்ளது. 30 நாட்களுக்கு இணையான தொகையை போனசாக வழங்க தமிழக நிதித்துறை அறிக்கை வெளியீட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000 பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது.

தொகுப்பு ஊதியம் ,சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோர்க்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும்,மேலும் கிராம உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்,ஒப்பந்த பணியாளர்கள் இவர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸை  தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் ரூ.2000 ஓய்வூதியம் பெறுவோர்க்கு ரூ.500 வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.ஏ மற்றும் பி பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு போனஸ் விதிமுறை பொருந்தாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment