பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் விநியோகம் தொடக்கம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் விநியோகம் தொடக்கம்!

பொங்கல் பரிசு மற்றும் பரிசு தொகுப்பை பெற இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடங்கப்ட்டது.

ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கப்பட்டது. இன்று முதல் தொடங்கி வருகின்ற டிசம்பர் 31ம் தேதி வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. எக்காரணத்தை கொண்டு ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube