பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்ககூடாது…!தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதோடு அதனோடு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது  ஆகும்.

இந்த நிலையில் தான் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment