• தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.
  • பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் நாளை காலை  விசாரணைக்கு ஆஜராக சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை தமிழக டிஜிபி ராஜேந்திரன் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சி சம்பவத்தில் பல அரசியல்வாதிகளுக்கு  தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதனால் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையில் நக்கீரன் கோபால் மீது அவதூறு புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் நாளை காலை  விசாரணைக்கு ஆஜராக சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.