சினிமா பாடலை பாடி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை!

கடந்த சில காலங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த இந்த கொரோனா வைரஸான, பல உயிர்களையும் காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் 700-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ள நிலையில், இதனை தடுப்பதாற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதனையடுத்து, இந்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்கள் யாரும் வெளியே தேவையில்லாமல் சுற்ற வேண்டாம் என கூறப்பட்ட நிலையில், பலரும் இதை கேட்காமல் சுற்றி வருகின்றனர். 

இந்நிலையில், காவல்துறையினர் பலரும் வித்தியாசமான முறையில், மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில்  உள்ள காவலர் ஒருவர்  சினிமா பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி  உள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.